உடல் நலத்தில் குடிநீரின் அளவும் அவசியமும்

நம் உடல்நலத்தில் நாம் அருந்தும் நீரின் அளவும், அருந்த வேண்டிய நேரங்களும் முக்கியமானவை. நாம் எப்பொழுதும் நலமுடன் இருக்க, கீழ்க்கண்ட முறைகளில் நீர் அருந்துதல் அவசியம்.

1. காலையில் தூங்கி எழுந்தவுடன் இரண்டு தம்ளர் அருந்த வேண்டும். இதனால் உடலின் உள் உறுப்புகள் விழிப்படைந்து செயல்பட ஏதுவாகும்.

2. குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

3. காலை சிற்றுண்டி அல்லது மதிய உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஒரு தம்ளர் அருந்துதல் உணவு செரிமானம் அடைய உதவும்.

4. இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தவிர்க்கலாம்.

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.”

About The Author

1 Comment

Comments are closed.