உண்மை அறிதல்

சந்திரனின் கிரணங்கள்
ரம்மியமானவை

புற்கள் நிறைந்த
பசுமையான வனம் இனியது

சாதுக்களின் சேர்க்கை
ஆனந்தம் அளிப்பது

காவியங்களின்
கதைகள் இனியவை

கண்களில் நீர் ததும்ப
கோபத்தில் ஒளிரும்
பிரிய மனைவியின் முகம் அழகானது

இவை அனைத்தும் அழகானவை

இவைகளின் நிலையாமையை
மனம் உணர்ந்தால்
அவை தன் அழகையிழந்திருக்கும்.

(சமஸ்கிருத செய்யுட்களின் தமிழ் மொழியாக்கம்)
(பரத்ருஹரின் சுபாஷிதம் மின்னூலில் இருந்து)

About The Author