எடை அதிகரிப்பால் விழி பிதுங்கும் பூமாதேவி!

ஒரு பெட்டிக்குள் எடைகுறைந்த 30 பொருட்களை வைத்தாலும், அதே பெட்டிக்குள் கணிசமான எடைகொண்ட 3 பொருட்களை வைத்தாலும் நடப்பது ஒரே கதைதான்! உள்ளே வைக்கும் பொருட்களின் எண்ணிக்கை ஒருவேளை குறையலாம். ஆனால், எடையின் அழுத்தம் அங்கே ஒன்றுதான்.

பூமாதேவியின் பாடு சற்றே சங்கடமானதாகத்தான் இருக்கின்றது. உலக நாடுகளெங்கும் உடல் பருத்தவர்கள் அதிகரித்து வருவதால், மக்கள்தொகை மேலும் நூறு கோடி அதிகரித்து விட்டது போல் மூச்சுத் திணறுகின்றாள் பூமாதேவி!

இலண்டனிலுள்ள ஓர் அமைப்பின் ஆய்வு முடிவில், உலக மக்கள்தொகையின் எடையை 28,70,00,000 தொன்னாகக் (Tons) கணித்திருக்கின்றார்கள். எடை அதிகரித்தவர்களால் பூமியின் மொத்த எடை 1,50,00,000 தொன் அதிகரித்திருப்பதையும், கொழுத்தவர்களால் 35,00,000 தொன் எடை கூடுதலாகி இருப்பதாகவும் இவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

2005இல் உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organization) சேகரித்த தரவுகளைக் கொண்டு, அறிவியலாளர்கள் உலக மக்களின் சராசரி எடை 62 கிலோ என்று கணித்தார்கள். ஆனால், பகுதிவாரியாகப் பெரிய வேறுபாடு காணப்பட்டது. வட அமெரிக்காவில் சராசரி எடை 80.7 கிலோவாக இருக்க, ஆசியாவில் அதுவே வெறும் 57.7 கிலோவாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கே வேடிக்கை என்னவென்றால், உலக மக்கள்தொகையின் 61 விழுக்காடு ஆசிய நாடுகளில்தான் இருக்கிறது. இருப்பினும், பூமியின் மொத்த எடையில் 13 விழுக்காடுதான் இவர்களைச் சென்றடைகின்றது. காரணம், ஆசிய நாட்டவர்கள் உருவத்தால் சிறியவர்கள்!

அதிக எடையுள்ளவர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் குவெத், கட்டார் போன்ற வளைகுடா நாடுகளும், எகிப்தும், கொரோசியாவும் முன்னணி இடங்களைப் பிடித்திருப்பது, ஆய்வை மேற்கொண்ட அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது. பல அரபு வளைகுடா நாடுகளில் இப்படி அதிகமான உடல் பருத்தவர்கள் இருப்பதற்குக் காரணம், இவர்கள் தம் பயணங்களுக்கு வாகனங்களை நாடுவதுதான் என்று இவர்கள் கருதுகின்றார்கள்.

ஏழை ஆப்பிரிக்கப் பெண்கள், அதிகம் பிள்ளைகளைப் பெறுவதால் பூமியில் எடை அதிகமாகின்றது எனச் சிந்திப்பதை விட, பண வசதியுள்ள பலர், நன்றாகக் குடித்துச் சாப்பிட்டு, பிள்ளைகள் இல்லாமல் வாழ்ந்தாலும் தங்கள் பருத்த உடலால் பூமியை வருத்தி வருகின்றார்கள் என்பதே உண்மை!

இங்கே வருவது, பல புள்ளி விபரங்களை அடக்கிய ஒரு பட்டியல். இங்கே நாடுகளின் பெயர்களும், அவர்கள் மக்கள்தொகை விபரமும், அந்தந்த நாடுகளில் அதிக எடையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கையும், நன்றாகக் கொழுத்தவர்களின் தொகையும் தரப்பட்டிருக்கின்றன. படித்துத்தான் பாருங்களேன்!

நாடு       தொகை   எடை      பருமன்
உலகம்   4,629மி*    111மி       23மி

அதிகம் உண்போரைக் கொண்ட முதல் பத்து நாடுகள்

அமெரிக்கா            236மி   22ம  8மி
ரஷ்யா                    122மி   5மி   1மி
எகிப்து                    50மி     4மி   1மி
மெக்சிகோ             73மி     4மி   1மி
யேர்மனி                71மி     4மி   0.9மி
பிரேசில்                 135மி   4மி   0.7மி
இங்கிலாந்து         49மி     3மி   0.7மி
அர்ச்செண்டினா   28மி     2மி   0.6மி
துருக்கி                   49மி     2மி   0.5மி
ஈரான்                      52மி     2மி   0.4மி

அதிகம் உண்போரைக் கொண்ட கடைசிப் பத்து நாடுகள்

புருனே                 0.3மி     3,824மி   363மி
இலங்கை            15மி      27,546மி 336மி
கினியா பிசௌ    0.8மி     4,832மி   310மி
காம்பியா              0.8மி     5,978மி   296மி
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு       2மி        8,595மி        245மி
கம்போடியா                                    8மி        23,857மி     155மி
கிழக்கு தைமூர்                              0.5மி     2,539மி       146மி
பூட்டான்                                         0.4மி     1,560மி       75மி
சாவோஸ்                                      0.9மி      781மி          62மி
எரித்ரியா                                       3மி          2,005மி      12மி

பிணியற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு வழிகாட்டுவது. எனவே, இதில் நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும்!

நடை அதிகம் இருந்தால் எடை அதிகம் இருக்காது!

கருத்தில் கொள்வோம்! கவலையின்றி வாழ்வோம்!
________________________________________________

மி = மில்லியன், பத்து இலட்சம்.

About The Author