எண்ணங்கள்

கண்ணில் கருக்கொள்ளும்
கனவுகள் என்
இதயத்தைக் குத்திக்
கிழித்திட்ட போதும்
மறக்க முடியாத நினைவுகளை
விட்டுப்போக முடியாதவாறு
மீண்டும் மீண்டும் என்னை
காயப்படுத்துகின்றன.

விடியும் பொழுதுகளை வசந்தமாய்
ஏற்படுத்த நினைக்கும் போது
காற்றாக வந்து
என் மௌனத்தை
உடைக்கிறாய்

பேச மறுக்கும் என்னை
பேச வைத்துப் பார்க்கத் துடிக்கும்
உன்னைப் பிடிக்கவும் இல்லை
விட முடியவும் இல்லை

About The Author

1 Comment

Comments are closed.