ஒரு அடிமையின் கதை

முன்னுரை

இது நாற்பது ஆண்டுகளுக்குமேல் அமெரிக்காவில் மாரிலான்ட்,தெற்கு கரோலினா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களில் அடிமையாக உழன்ற சார்ல்ஸ் பால் என்பவரின் கதை. எப்படி அடிமைகள் பருத்தித் தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதை அடிமையாக வாழ்ந்த ஒருவர் விவரிக்கும் உண்மைக் கதை. இளகிய மனங்களைக் கண்ணீர்விடத் தூண்டும் ஒரு பரிதாப அடிமையின் இந்த உண்மை வரலாறு, சார்ல்ஸ் பாலின் அடிமை வாழ்க்கையையும் தனது எஜமானர்களிடமிருந்து இரண்டுமுறை தப்பிக்க முயற்சி செய்ததையும் உருக்கமாக விவரிக்கிறது. படிக்கும்போது இப்படியும் கொடுமைகள் நடக்குமா, நீதி, சட்டம் ஒன்றுமே இல்லையா என்று இக்கதை வியப்பில் ஆழ்த்தலாம். ஆனால் அன்றைய பத்திரிகைச் செய்திகள், ‘ஆமாம், இவையெல்லாம் இன்று உலகத்துக்கே எடுத்துக் காட்டாக விளங்கும் சுதந்திர அமெரிக்காவில் நிகழ்ந்தவைதான்’ என்று சாட்சியம் கூறுகின்றன.உங்கள் சந்தேகத்தைத் தீர்க்கப் பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் இதோ!

டுஸ்காலூசா-அலபாமா

ஒரு பயங்கர சம்பவம்-சென்றவாரம் ஒரு நாள் ஒவ்வொரு நாகரிக மனிதனும் வெட்கப்படும்படியான , மனத்தைக் கொதிக்கவைக்கும் ஒரு சம்பவம் பெர்ரி எனும் இடத்தின் வடகிழக்கு எல்லையில் நிகழ்ந்தது. திரு. மாக்னிலி என்பவர்,’ தனது உடைகள் மற்றும் சில உடமைகள் காணாமற் போய்விட்டது, அதை பக்கத்தில் உள்ள பருத்தித் தோட்டத்தில் வேலை பார்க்கும் அடிமைதான் திருடியிருக்க வேண்டும்’ என்று குற்றம் சாட்டினார். அவரும் அவர் சகோதரரும், அந்த அடிமை கருப்பர், தனது எஜமானரின் வாகனத்தை ஒட்டிச் செல்வதைப் பார்த்தனர். அவனை வாகனத்திலிருந்து பிடித்து இறக்கி அடிக்கத் துவங்கினர். அந்த கருப்பர் மக்நிலியைக் கத்தியால் குத்திவிட அவர் அங்கேயே இறந்துவிட்டார். வழக்கு அமைதியை நிலைநாட்டும் நீதிபதியிடம் வந்தது.

அந்த நீதிபதியோ, சம்பவம் நடந்த மாகாணங்களிலிருந்து கும்பலாக 70,80 பேர் அணிதிரண்டு வந்து அவரது வீட்டை முற்றுகை இட்டதைக் கண்டு அச்சப்பட்டோ என்னவோ தீர்ப்பை கூடியிருந்த மக்களின் வாக்குக்கு விட்டுவிட்டார். அந்தக் கூட்டம் குற்றம் சாட்டப்பட்ட கருப்பர் உடனே நெருப்பிலிட்டு கொளுத்தப்பட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது. அந்தக் கருப்பரும் மரத்தில் கயிற்றால் பிணைக்கப்பட்டார். அவரைச் சுற்றி விறகுகள் அடுக்கப்பட்டன. பின்னர் அவை தீயிடப்பட்டு கருப்பர் தீயில் உடல் கருகி எரிந்து சாம்பலனார். சில நல்லவர்கள் இந்தக் கொடுஞ் செயலுக்கு எதிராக எழுப்பிய குரல்கள் யார் காதுக்கும் எட்டவில்லை.

இதேபோல் 1836 ஏப்ரல் 28ம் தேதி இன்னொரு கருப்பர் தீயிலிட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். இறப்பைப் போல அந்த இடமே அமைதியாயிருந்தது. பலியாடான அந்தக் கருப்பு அடிமையைச் சுற்றி விறகுகள் அடுக்கப்பட்டன. முதலில் அந்த அடிமையிடமிருந்து எந்தக் குரலும் எழும்பவில்லை – பின்னர் ஒரு ஈனஸ்வரத்தில் குரலெழுப்பி இறைவனை வேண்டினான். அவனைச் சுற்றி நெருப்பு முழுவதும் பரவி கண்கள் எரிந்து வெளியே வரத் துவங்கின. முகம் முழுவதும் வெந்துவிட்டது.

அப்போது கூட்டத்தில் கொஞ்சம் இரக்க சுபாவமுள்ளவர்கள் அந்த அடிமையை இப்படி மேலும் துன்புறுத்தாமல் சுட்டுக் கொன்றுவிடலாம் என்றார்கள். கூட்டத்திலிருந்தவர்கள், "அதனால் ஒன்றும் பயனில்லை- அவன் வலியே தெரியாத நிலையை அடைந்துவிட்டான்" என்றார்கள். அப்போது எரிந்து கொண்டிருந்த அடிமை, "இல்லை – என்னைச் சுட்டுவிடுங்கள்" என்று கதறினார். கூட்டத்திலிருந்த கொடுமையாளர்கள்," கூடாது, அவனைச் சுடக்கூடாது- வேண்டுமானால் நெருப்பை மெதுவாக எரியவிட்டு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவிடுங்கள்- அவன் வேதனையால் கதறி அழட்டும்" என்று கோஷமிட்டனர்- கோஷமிட்டவர்களில் ஒருவர் நீதி அரசர்.

இதேபோன்று நெருப்பிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை செய்து கொல்லும் வழக்கம் தொடர்ந்து நடை பெற்றது.

அடிமையை விலைக்கு வாங்கிய எஜமானருக்குத்தான் அந்த அடிமை வாழ வேண்டுமா இல்லை சாகவேண்டுமா என்று தீர்மானிக்கும் உரிமை இருந்தது. தெற்கு மாகாணங்களில் இந்த உரிமை எந்த அளவுக்கு இருந்தது என்பதையும் ஒரு வழக்கு நிரூபித்தது.

ஒருவரிடம் வேலை பார்க்கும் அடிமை வேறு ஒருவரால் கொல்லப்பட்டால் அப்படிக் கொன்றவர் அடிமையின் முதலாளிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதுதான் வழக்கு. இதில் வேடிக்கை என்னவென்றால் முதலாளிக்குத் தன்னிடம் வேலை பார்த்த அடிமை இறந்தது பற்றி கவலையில்லை, அவனை வாங்குவதற்காக தான் செலவழித்த தொகை, அவனது உடலுழைப்புக்கான நஷ்ட ஈடு தனக்குக் கிடைக்கவேண்டுமே என்பதுதான் அவரது கவலை.

இந்த வழக்கில் கருப்பு அடிமை அவரது மேற்பார்வையாளர் சொன்னதைச் செய்யாததற்காக கட்டிவைத்து சவுக்கால் அடிக்கப்பட்டு சித்திரவதைக் குள்ளானான். அந்த மேற்பார்வையாளர் அவனை மயக்கம் வரும்வரை அடிப்பார்- பிறகு சிறிது விட்டு அவன் மயக்கம் தெளிந்ததும் அடித்து விளாசுவார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தன் நினைவையிழந்து குற்றுயிரும் குலையுயிருமாக ஆனபிறகு தெருவில் வீசி எறிந்துவிட்டார்.

அந்த அடிமையும் சிறிது நேரத்தில் உயிரிழந்தான். வழக்கு, அந்த மேற்பார்வையாளர் அவரது முதலாளிக்கு இறந்த அடிமைக்கான நஷ்ட ஈடு கொடுப்பதைப் பற்றித்தான். நீதி அரசர்களும் இறந்தவர் பற்றி கவலைப் படவில்லை- மேற்பார்வையாளர் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று பணக் கணக்கு போட்டது.

கொடுமைகள் தொடர்கின்றன ……..

About The Author

2 Comments

Comments are closed.