ஓவியனின் மரணம்

கேள்விப்பட்டான்
இங்கு வாழ்க்கை
மேலும்
நாகரீகமாகிறதென்று…
ஆகவே,
வெண்திரையில்
ரொட்டிகள் தீட்டினான்
வீட்டில் நான்கு மங்கிய
சுவர்கள் தவிர வேறில்லை
ஐம்பதாண்டுகள்
தூரிகைகள்
வண்ணங்களுடன்
ஓர் உன்னத ஆசையை
நிறைவேற்றுகிறான்
ஊடகங்களோ
கொசுக்களைக்
கோபுரத்திலேற்றுகின்றன
அவனது தூய உணர்வுகள்
அவனது நம்பிக்கை
அமைதியுடன் முடிய
இட்டுச் செல்கின்றன
வெளியிலிருந்து
தொலைக்காட்சியின்
கலாச்சார சமூகத்தின்
எச்சில் மழைக்குள்
பறந்திட…

ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: Ho Chee Lick

(பூமியின் எதிரொலிகள் – மின்னூலில் இருந்து)

About The Author