கடலை மிட்டாய் !

கடலை மிட்டாய் இதோ பார்
கடித்துத் தின்று சுவைக்கலாம்
நிலத்துள் விளையும் கடலைகள்
நிறையக் கொத்தாய்க் காய்த்திடும்
காந்தித் தாத்தா விரும்பியே
கடலைகளை உண்பாராம்!

பனை மரத்தின் உச்சியில்
பனங்குலைகள் நீர் தரும்
நீரைக் காய்ச்சி வெல்லமாய்
நேர்த்தியாக மாற்றுவர்
கடலை வெல்லக் கலப்பினால்
கடலை மிட்டாய் ஆகுமே!

சதுரமான வடிவம்தான்
சத்தும் நிறைய உள்ளது
உருண்டையாக வேண்டுமா
ஓடிப்போய் நீ வாங்கிக்கொள்!
உயர்வும் தாழ்வும் சேர்கையில்
உண்மையிலே இனிக்குமாம்!

About The Author