கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை நீக்கிடச் சில எளிய வழிகள்

கண்ணைச் சுற்றியுள்ள சருமம் மிக மெல்லியது மட்டுமில்லாமல் மிகவும் மென்மையானதும் கூட. தூக்கமின்மை, மன அழுத்தம், உடல்நலக்குறைவு, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் குறைபாடு போன்ற பல காரணங்களால் கண்ணைச் சுற்றிக் கருவளையம் ஏற்படுகிறது. கருவளையங்கள், அதிகமாக வேலை செய்பவர்களுக்கு மட்டுமில்லாமல் இல்லத்தரசிகள், இரவு நேரங்களில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கும் ஏற்படுகின்றன. ஆரம்பக் கட்டத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தோன்றாதபோதும், முகம் சோர்வடைந்து, நாளடைவில் வயதான தோற்றம் ஏற்பட்டுவிடும். நம் வீட்டில் இருக்கும் பொருட்களினால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை நீக்குவதற்கான வழிகளை அறிந்து கொள்வோமே!

கருவளையங்களை நீக்குவதற்கான வழிகள்

* துருவிய உருளைக்கிழங்கின் சாற்றில் கொஞ்சம் பஞ்சை ஊறவைத்து அதனைக் கண்ணைச் சுற்றி, கருவளையங்கள் இருக்கும் பகுதிகளில் படுமாறு வைத்து, 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* சிறிதளவு தக்காளி சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து, ஒரு நாளில் இருமுறை கண் இமைகள் மற்றும் கண்ணைச் சுற்றிக் கருவளையங்கள் இருக்கும் பகுதிகளில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* தினமும் தக்காளிச் சாற்றில் புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்து அருந்தலாம்.

* பாதாம் பருப்புக்களைப் பாலுடன் சேர்த்துக் கெட்டியாக அரைத்து, கருவளையங்கள் இருக்கும் பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* அன்னாசிச் சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் கருவளையங்கள் இருக்கும் பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* புதினா இலைகளை அரைத்துக் கருவளையங்கள் இருக்கும் பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* வெள்ளரிச் சாற்றைக் கருவளையங்கள் இருக்கும் பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* உருளைக்கிழங்குச் சாற்றுடன் வெள்ளரிச் சாற்றைச் சேர்த்துக் கருவளையங்கள் இருக்கும் பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* வெள்ளரிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கருவளையங்கள் இருக்கும் பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* வெள்ளரிச் சாற்றில் ஊறவைத்த பஞ்சைக் கண் இமைகள் மற்றும் கருவளையங்களில் படுமாறு வைத்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* பன்னீரில் ஊறவைத்த பஞ்சைக் கண் இமைகள் மற்றும் கருவளையங்களில் படுமாறு வைத்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* குளிர்ந்த நீரில் ஊறவைத்த பஞ்சைக் கண் இமைகள் மற்றும் கருவளையங்களில் படுமாறு வைத்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* குளிர்ந்த பாலில் ஊறவைத்த பஞ்சைக் கண் இமைகள் மற்றும் கருவளையங்களில் படுமாறு வைத்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* பயன்படுத்தப்பட்ட தேநீர்த்தூள் / தேநீர்த்தூள் பையைக் கண் இமைகள் மற்றும் கருவளையங்களில் படுமாறு வைத்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* பாதாம் எண்ணெய் / தேங்காய் எண்ணெயினால் கண்ணைச் சுற்றித் தினமும் 30 நிமிடங்கள் மசாஜ் செய்து, பிறகு எண்ணெயைப் பஞ்சால் துடைத்து விடலாம்.

* 1 மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய், அரை மேஜைக்கரண்டி சந்தனம், அரை மேஜைக்கரண்டி துருவிய உருளைக்கிழங்கு, 10 சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையைக் கருவளையங்கள் இருக்கும் பகுதியில் தடவி, காய்ந்த பிறகு முகத்தைக் கழுவலாம்.

* வெள்ளரி / உருளைக்கிழங்குத் துண்டுகளைக் கருவளையங்களில் படுமாறு வைத்து, 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவலாம்.

* கேரட் சாற்றினைக் கண் இமைகள் மற்றும் கருவளையங்களில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* பாதாம் எண்ணெய் மற்றும் தேனைக் கலந்து கருவளையங்களில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

* கடலை மாவுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கருவளையங்களில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.

கருவளையங்கள் ஏற்படாமல் தடுத்திடச் சில எளிய வழிகள்

* முகப்பூச்சுக்களைக் கண் இமைகளிலோ கண்ணைச் சுற்றியோ தடவாதீர்கள்!

* கண்களை, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பிறகு குளிர்ந்த நீரிலும் கழுவிடவும். இதனால் கண் சுத்தமடைவது மட்டுமல்லாமல், கண்ணைச் சுற்றியுள்ள இரத்தம் ஓட்டம் அதிகரிக்கிறது.

* தினமும் தக்காளிச் சாற்றை அருந்திடுங்கள்.

* தினமும் மூச்சுப் பயிற்சி, தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றைச் செய்திடுங்கள்.

* பழங்கள், பாதாம் பருப்புகள், பச்சைக் காய்கறிகள், வெண்ணெயெடுத்த தயிர், முளைப் பயிர்கள், ஆடை எடுத்த பால், பீன்ஸ், வைட்டமின் பி சத்து நிறைந்த பொருட்கள் போன்றவற்றை உணவினில் சேர்த்திடுங்கள்.

* தினமும் 8 டம்ளர் தண்ணீர் அருந்திடுங்கள்.

* அதிக அளவில் காபி அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.

* தினமும் கண்களைக் குளிர்ந்த நீரினால் கழுவிடுங்கள்.

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல.

About The Author

2 Comments

Comments are closed.