கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து (ஒரு பழைய தியாகராஜ பாகவதர் பாடல் வரி)

ஒரு புராதன ஜோக்..

மனைவி மூக்குக் கண்ணணாடியை அணிந்துகொண்டே தூங்க ஆரம்பித்தாள்..

கணவன் கேட்டா‎ன். "கண்ணாடியைக் கழற்றிவிட்டு தூங்குவதுதானே?"

"போங்க, அப்போதான் சொப்பனத்தில் எல்லாமே தெளிவாகத் தெரியும்" என்று சொல்லிப் புரண்டு படுத்துக்கொண்டாள் மனைவி.

நீங்கள் அப்துல் கலாம் அவர்கள் சொல்வதைப் போல் வருங்கால பாரதத்தைப் பற்றி கனவு காண்பவர்களானாலும் சரி.. இல்லை.. அலுவலக உறக்கத்தில் கனவு காண்பவர்களானாலும் சரி–..

கனவுகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான சேதிகளை சொப்பனானந்த ஸ்வாமி அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

நமது வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்திலேயே சென்று விடுகிறது.

வாழ்க்கையில் ஆறு வருடங்கள் கனவு காண்பதிலேயே கடந்து விடுகிறது. அதாவது சுமார் 2100 நாட்கள் நமக்கு கனவுலகம் தான்.!

மனித குலம் துவங்கியதிலிருந்து கனவுகள் இருந்திருக்கின்றன. ரோம் நகரத்தில் சிலரின் அதிசயமான கனவுகளின் அர்த்தம் காணுவதையும் ஆராய்ச்சி செய்வதையும் அரசு சபையே மேற்கொண்டதாம்.

கனவு காணாமல் யாருமே இருக்க முடியாது. கனவுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போகலாம். அதனால் கனவே காண்பதில்லை என்று சொல்ல முடியாது.

கனவுகளைத் தவிர்க்கவே முடியாது. அப்படி கனவுகள் காணவில்லையென்றால் அது ஏதோ உடலில் புரத சத்தின் குறைவாகவோ அல்லது ஆளுமையில் எதோ குறைபாடாகவோதான் இருக்கும்.

ஒரு இரவில் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு மணிகள் கனவுகள் வருகின்றன. நாலு முதல் ஏழு கனவுகள் வரை ஒரு இரவில் காண்கிறோம்.

தூங்கின உடனேயே கனவு வருகிறதா? அது கடந்த காலத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

நடு ராத்திரிக் கனவா .? அது நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு.

பார்வையற்றவர்கள் கூட கனவுகள் காண்கிறார்கள். கனவுகளில் அவர்கள் காட்சிகளைக் காணமுடியுமா என்பது அவர்கள் பிறவிலேயே பார்வை இழந்தார்களா அல்லது பின் ஏதேனும் விபத்தில் இழந்தார்களா என்பதைப் பொறுத்தது. ஆனால் கனவுகள் காண்பது காட்சிகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒலி, ஸ்பரிசம், மணம் இவைகளின் அடிப்படையில் கூட அவர்களின் கனவுகள் அமையலாம்.

கனவுகள் கண்ட 5 நிமிடத்திற்குப் பின் பாதிக் கனவுகள் மறந்துவிடும். 10 நிமிடங்களுக்குப் பின் 90 சதவிகித கனவுகளும் மறந்து விடும்.

ஆங்கிலத்தில் DREAM என்ற வார்த்தை dreme என்ற சொல்லிலிருந்து வந்ததாம். அதத்ற்கு மகிழ்ச்சி, இசை என்று பொருள். .

நமது மூளையின் அலைகள் விழித்திருக்கும் நிலையை விட கனவு நிலையில் தான் மிகவும் சுறு சுறுப்பாக இயங்குகி‎ன்றனவாம்.

நல்ல உறக்கத்திற்கு இடையே வரும் REM (Rapid eye movement ) என்ற துயில் நிலையில்தான் (அதாவது செம தூக்கத்திற்கும், பாதி விழிப்பிற்கும் இடையே உள்ள அவஸ்தை நிலை) பாலின (பலானா) சம்பந்தமான கனவுகள் வருகின்றனவாம்.

புகை பிடிப்பதை நிறுத்தப் பழக்கம் செய்து கொண்டிருப்பவர்கள் சில காலம் அதிக நேரம் கனவு காண்கிறார்களாம்.

குறட்டை விடுகிறீர்களா? அப்போ நீங்கள் கனவு காண முடியாது.

நன்றி. (spiritual. Com,) மற்றும் ரசித்த சில குறிப்புக்கள்

About The Author