கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஜப்பான் – ஜில ஜுவாரஜ்யமான ஜமாஜா¡ரங்கள்

இரண்டாம் உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த ஜப்பான், அதிலிருந்து மீண்டு தற்போது ஒரு சாதனை படைத்த நாடாக விளங்குகிறது. அதைப் பற்றிய சில ருசிகரத் தகவல்கள் இங்கே.

(நன்றி : எஸ் சந்திரமவுலி அவர்கள் எழுதிய "ஜப்பான் – ஒரு ஃபீனிக்ஸின் கதை" என்ற கட்டுரை நூல்.)

ஜப்பானியர்களுக்கு அழகுணர்ச்சி அதிகம். அவர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் அழகுணர்ச்சி வெளிப்படும். வீடுகளில் பெண்கள் செய்யும் மலர் அலங்காரங்கள் அழகுக்காக மட்டுமல்ல; குடும்பத்தினரிடம் உள்ள அன்பைக் காட்டுவதற்கான அடையாளமும் கூட.

உலகின் அதிவேகமானதென்ற பெயரைப் பெற்ற ஜப்பானின் ரயில் ‘ஷின் கான் சென்’. இதை புல்லட் ரயில் என்று அழைக்கிறார்கள்.

ஜப்பானியர்களுக்கு இரண்டு எண்களைக் கண்டால் பிடிக்காதாம். அவை 4 மற்றும் 9. அவை அதிர்ஷ்டமற்ற எண்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. அதிலும் முதியவர்கள் 4, 9 சம்பந்தப்பட்ட எதையும் தொடமாட்டார்கள்.

உலகிலேயே மிக நீளமான தொங்குபாலம் ஜப்பானில் உள்ள அகாஷி கைக்யோ பாலம். பாலத்தைத் தாங்கி நிற்கும் கோபுரங்களின் உயரம் 928 அடி.

உலகிலேயே மிக பிரம்மாண்டமான, தங்க முலாம் பூசப்பட்ட வெண்கல புத்தர் சிலை ஜப்பானில் நாரா என்ற இடத்தில் உள்ள தொடாஜி கோவிலில் இருக்கிறது.

கடலுக்கடியில் உள்ள மிக நீளமான சுரங்கப்பாதை ஜப்பானில் இருக்கிறது இதன் பெயர் சைகான் சுரங்கப்பாதை.

உலகின் மிக நீளமான 16 சுரங்கப் பாதைகளில் ஏழு ஜப்பானில் இருக்கின்றன.

டோக்கியோவில் உள்ள டிஸ்னிலாண்டுதான் உலகில் மிக அதிகமானவர்கள் பார்வையிடுகின்ற தீம் பார்க். இது 1983ல் தொடங்கப்பெற்றது. இதற்கு ஆண்டுக்கு ஒரு கோடியே 70 லட்சம் பேர் விஜயம் செய்கிறார்கள்.

உலகிலேயே அதிகமாகப் பேசப்படுகின்ற மொழிகளில் எட்டாவது ‏ இடத்தில் இருக்கிறது ஜப்பானிய மொழி. ஜப்பானில் சீன, கொரிய, போர்ச்சுகீஸ் மொழிகளும் பேசப்படுகின்றன. ஜப்பானியர்கள் தங்கள் மொழியில் ஆங்கிலத்திலிருந்து அதிகமான வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டு தங்கள்¢ன் ஜப்பானிய மொழியைப் போலவே உச்சரிக்கிறார்கள்.

ஜப்பான் மூவாயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட நாடு. அவற்றில் 600 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.

உலகின் மிகப் பெரிய நகரம் டோக்கியோ. 2 கோடியே 65 லட்சம் மக்களை உள்ளடக்கியது. (2005ம் ஆண்டு கணக்கின்படி) ஜப்பானின் மொத்த ஜனத்தொகையில் 20 சதவிகித மக்கள் டோக்கியோவில்தான் வசிக்கிறார்கள்.

உலகில் மிக அதிகமாக ரோபோவை (எந்திரனை!) உபயோகப்படுத்தும் நாடு ஜப்பான். அதிக அளவில் தொழிற்சாலைகளில் ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்புவதில் ஜப்பானியருக்கு ஆர்வம் மிகுதி. ஒவ்வொரு ஆண்டும் 35 பில்லியன் வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறார்களாம். ஜப்பானியத் தபால் துறைக்கு வருமானத்தில் இருபது சதவிகிதம் புத்தாண்டு அட்டைகள் முலம் கிடைக்கிறதாம்.

ஜப்பானியர்களில் அதிகமானவர்களின் ரத்தப் பிரிவு ஏ(A). 38 சதவிகிதம் பேருக்கு இப்படி இருக்கிறது. (அது ஏன் அப்படி?!)

உலகிலேயே மிக அதிகமாக பத்திரிகைகள் படிப்பவர்கள் ஜப்பானியர்கள்தான். 67 சதவிகித மக்கள் தினமும் ஒரு பத்திரிகையாவது படிப்பார்கள். உலகிலேயெ மிக அதிகமாக விற்பனையாகும் பத்திரிகை "யோ மியூரி ஷின்பென்" (அய்யோ!) தினசரி ஒரு கோடியே ஐம்பது லட்சத்திற்கு மேல் விற்பனை.

உலக சுகாதார கழகத்தின் அறிக்கையின்படி ஜப்பானிய மக்கள் தொகையில் வயது வந்தவர்களில் 49 சதவிகித மக்கள் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். (அன்புமணி ஐயாவை கொஞ்சம் அங்கே அனுப்பி வைக்கலாமோ?) வயதுவந்த பெண்களில் 13 சதவிகித பெண்கள் புகை பிடிக்கிறார்கள்.

ஜப்பானில் சுமார் ஐந்து கோடி மக்கள் செல்லப் பிராணிகளை வளர்க்கிறார்கள்.

உலகில் மிக அதிகமான அளவில் தற்கொலை நடைபெறும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. 2004ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் முப்பத்து நான்காயிரம்.

"125 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பாதிரியார் ஒருவர் ஜப்பான் சென்றபோது அங்கு மனிதனை பல்லக்கு மாதிரி நாற்காலியில் அமர வைத்து இருவர் சுமந்து செல்வதைப் பார்த்தார். மனம் நொந்த அவர் சுமப்பதைவிட இழுப்பது சுலபம் என்று நிச்சயித்து நாற்காலிக்கு சக்கரங்களை இணைத்தார். இதுதான் கை ரிக்ஷா. ரிக்ஷா என்பது ஜப்பானிய வார்த்தை. பிறகு இது இதர ஆசிய நாடுகளிலும் பிரபலமாகியது. இந்தியாவில் கை ரிக்ஷாக்களை கொல்கத்தா நீங்கலாக- ஒழித்து விட்டாலும் ஜப்பானில் இப்போதும் கை ரிக் ஷாக்கள் உண்டு. கெய்ஷா அழ்கிகள் கை ரிக்ஷாவை உப்யோக்கிறார்கள்"
– படிததது-ஹாய் மதன் கேள்வி பதில் – விகடன்

About The Author

1 Comment

Comments are closed.