கண்ணீரோடு தலையணை…

இரவும்
உறக்கமும்
இருவேறுபட்டாலும்

அலட்டிக்கொள்ளவில்லை
இதயம்

அவள்
அணைப்பில்லாத
உறக்கம்
அருவருக்கிறது

******

இருந்தும்
பிரிவுச்சோகம்
பிதற்றுகிறது

நீண்ட இரவு
நிம்மதி
நீறுபூக்கிறது

நிமிர்ந்த படுக்கை
கரையைக்
கரங்கள்
தேடுகிறது

வயது
வாழ்க்கையை
நோகிறது

******

பாவம் கண்கள்
பழி கிடக்கிறது

மனதின்
ஆவல்
மரித்துக் கிடக்கிறதே!

******

இளமையில்
வறுமை இல்லை;
இருளும்
இவள் நினைவும்
கொடுமை.

******

பக்கத்துத் தலையணை
பார்த்து முறைக்கிறது

எப்போதும்போல்
என் தலையணை

இதயச் சூட்டில்
கண்ணீரைக்
காயவைக்கிறது.

******

About The Author

4 Comments

  1. கீதா

    காதலின் வலி சொல்லும் கவிதையின் கரு அருமை. காதற்பிரிவு என்பதால் வார்த்தைகளையும் பிரித்து வைத்தீர்களோ? 🙂

  2. Mannai Pasanthy

    இளமையில் வறுமை இல்லை; இருளும் இவள் நினைவும் கொடுமை. அருமையான கவிதை வரிகள்

Comments are closed.