கமான்.. கிலி.. கிலி..


அனுபிரியாவை கூட்டத்தில் பார்த்தால் நிச்சயம் அழகான சுட்டிப் பெண் (சிறுமி!) என்றுதான் நினைப்போம். இன்னமும் மழலை மாறாத குரல்.. முகம். ‘கமான்.. கிலி.. கிலி..’ என்று தன் திறமையைக் காட்ட ஆரம்பித்தாலோ திகைப்பில் ஆழ்ந்து விடுவோம்!

"எப்படிம்மா மேஜிக்ல ஆர்வம் வந்தது?"

"எங்க தாத்தா" என்று கையைக் காட்டினாள்.

தாத்தா சீதாராமன் சொல்கிறார்.

"அனுபிரியாவிற்கு 5 வயது இருக்கும்போது (இப்போது 10 வயது!) பள்ளியில் ஆடை அலங்கார போட்டி நடந்தது. அப்போது என் பேத்தி வித்தியாசமாக மேடையில் வரவேண்டும் என்பதற்காக மேஜிக் நிபுணர் வேடம் போடச் சொன்னேன். சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக் கொடுத்த மந்திரம்தான் ‘கமான் கிலி கிலி’. இன்று எல்லாப் பள்ளிகளிலும் நிகழ்ச்சி நடத்தி விட்டாள்."

"மேஜிக்ல நான் நல்லா வரணும்னு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேஜிக் பொருட்களை தாத்தா வாங்கிக் கொடுத்திருக்கிறார்" என்றார் அனுபிரியா.

 

பெல் (BHEL) ஆஸ்பிடலில் ரேடியோகிராபராகப் பணி புரியும் திரு. கோவிந்தராவ்-லட்சுமி தம்பதியின் ஒரே மகள் அனுபிரியா. திருச்சி ஆர்.எஸ்.கே பள்ளியில் படிக்கிறார்.

"50 விதமான மேஜிக்குகளை ஏறத்தாழ ஒரு மணி நேரம் இடைவிடாமல் செய்து காட்டுவேன். சின்ன பேப்பரில் கோழிக்குஞ்சை வரைந்து அதை நிஜ கோழியாக வரவழைப்பது. ஒரு குடுவையில் ஒன்றுமே இல்லாமல் மலர்க்கொத்து வரவழைப்பது. பல நிறங்களைக் கொண்ட துணியை ஒரே நிறத் துணியாக மாற்றுவது. மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து குடையாக வரவழைப்பது.." இவையெல்லாம் செல்வி அனுபிரியாவின் மேஜிக் சாகசங்களில் சில.

யுவ கலா பாரதி, இளம் சாதனையாளர் விருது, வெற்றிச் செல்வி விருது என்று பல விருதுகளைப் பெற்ற இவருக்கு ஓவியமும் நடனமும் கை .. பிளஸ் .. கால் வந்த கலை! அவற்றிலும் பரிசுகள்!

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட குளோபல் இந்தியா எஜிகேஷன் பவுண்டேஷன் இவருக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்து அவரின் திறமையை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

திரு. மோகனிடம் முதலில் கற்றுக் கொண்ட அனுபிரியாவின் இப்போதைய குருநாதர் நிவேதிதா.

திரு. கோவிந்தராவ் சொல்கிறார். "இலவசமாத்தான் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இவள் திறமை அனைத்து பள்ளி மாணவர்களையும் சென்று அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை"

அனுபிரியாவிடம் கேட்டோம்.

"என்னவா ஆகணும்னு உங்களுக்கு ஆசை?"

"கலெக்டரா" பளிச்சென்று பதில் வந்தது அனுபிரியாவிடமிருந்து.

ஆம். ஒரு திறமையான மேஜிசியன் கலெக்டராகவும் ஆகிவிட்டால்.. கமான்.. கிலி..கிலி என்று நம் நாடே சுபிட்சமாகி விடாதா எதிர்காலத்தில்!”

About The Author

4 Comments

 1. மதி நிறை செல்வன்

  இக்கட்டுரை மிக நன்றாக உள்ளது. அனுவை எப்படி தொடர்பு கொள்வது?

 2. magic anu

  மகிc அனு
  D2 15
  B H ஏ ள் Tஒந்ன்ஷிப்
  Tரிச்ய் 620 014
  Tஅமில்னடு

 3. ganesh

  இட் ரெஅல்ல்ய் இன்டெரெச்டிங் வெர்ய் சோன் நெ cஅல்ல் அட் மலய்சிஅ fஒர் ம்ய் கொச்பிடல் டய் fஉன்cடிஒன்.

Comments are closed.