கருணைக் கிழங்கு குழம்பு

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு – ¼ கிலோ
வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் – 50 கிராம் (உரித்தது)
வெள்ளைப் பூண்டு – 50 கிராம் (உரித்தது)
தக்காளி – 1
புளி – பெரிய எலுமிச்சையளவு
மிளகாய்ப்பொடி – 3 மேசைக்கரண்டி
தனியாப்பொடி – 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

தாளிக்க:

கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், மிளகு –  1/4தேக்கரண்டி (தனித்தனியாக)

செய்முறை:

கருணைக்கிழங்கைத் தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, வேக வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு கனமான வாணலியில் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு, பொரிந்ததும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், உரித்து வைத்த சின்ன வெங்காயம்,  பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்குங்கள்.

பின்பு மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, வேக வைத்த கருணைக் கிழங்கு ஆகியவற்றைப் போட்டு இலேசாக வதக்கி, பெருங்காயம் சிறிதளவு,புளிக் கரைசலும் உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

அவ்வளவுதான், சுவையான கருணைக்கிழங்கு குழம்பு தயார்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author