கலவை கேக்

தேவையான பொருட்கள்:

முந்திரி – 100 கிராம்
பாதாம் பருப்பு – 100 கிராம்
பிஸ்தாப் பருப்பு – 50 கிராம்
கோவா – 200 கிராம்
நெய் – 200 கிராம்
சர்க்கரை – 600 கிராம்
வெனில்லா எஸ்ஸென்ஸ் – சிறிதளவு
ஆரஞ்சு அல்லது பச்சை வண்ண நிறமூட்டிகள் – சிறிதளவு

செய்முறை:

பாதாம் பருப்பை முந்தைய நாள் இரவே நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் அதை எடுத்துத் தோலை உரித்துக் கொள்ளுங்கள். அதே போல் பிஸ்தாப் பருப்பைக் கொதிக்கும் நீரில் போட்டுத் தோலை நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். இவற்றோடு முந்திரியையும் சேர்த்து மூன்று பருப்புகளையும் வெண்ணெய் போல விழுதாக அரைக்க வேண்டும்.

வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி, நன்றாகக் கரைந்ததும் இரண்டு தேக்கரண்டி பால் ஊற்றினால் சர்க்கரையில் இருக்கும் அழுக்குகள் தனியாகப் பிரிந்து வரும். அதை அப்படியே மேலோடு எடுத்து விடுங்கள். இப்பொழுது கம்பிப் பதம் வரும்வரை பாகு காய்ச்ச வேண்டும். பாகு வந்ததும் அதில் வண்ணப்பொடியையும், எஸென்ஸையும் கலந்து கொள்ளுங்கள்.

அரைத்த விழுதை இத்துடன் சேர்த்து மட்டான தழலில் கை விடாது கிளற வேண்டும். பிறகு நெய்யையும் சேர்க்க வேண்டும். கொஞ்சம் கேக் கெட்டியானதும் கோவாவை உதிர்த்துச் சேர்க்க வேண்டும். கிளறிக் கொண்டே இருக்கையில், கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, தேவையான வடிவங்களில் வெட்டித் துண்டுகள் போடுங்கள்.

சுவை மிகுந்த கலவை கேக் தயார்!

About The Author