கவிதைகள் (1)

முடிவுறாத காலம்

பிரேதங்கள் பயணிக்கும் நெடுஞ்சாலையில்
எப்போதோ வீசியெறியப்பட்ட
என் உடல்
சொற்களை உமிழ்ந்தவாறு
உயிர்ப்புடன் இன்னும்.
எல்லாக் கட்டங்களை
நிரப்பிய பின்னும்
முடிவில்லாமல் நீள்கின்றன
புதிய கட்டங்கள்.
43 வருடங்களுக்கு முன்
நான் என்னவாக இருந்தேன்?
ஒரு வேளை அது
நானே இல்லையென்றால்
என்ன அது?
என்னவாக இருந்தால் என்ன?
அதற்கு மொழியின் தேவையோ
கேள்வியோ இருந்ததோ?
வலியோ இன்பமோ உணரப்பட்டதோ?
ஓ… முடிவே!
எங்கே ஒளிந்திருக்கிறாய் நீ?…

About The Author