கவிதைகள்

பொது அறிவு

வந்தேமாதரம் பாடுங்கள்
குழந்தைகள் பாடினார்கள்
தாய் மண்ணே வணக்கம்!

தேசிய சிக்கல்

இந்த தேசத்திற்கு ஆபத்து
முழங்கிய தலைவருக்கு விக்கல்
தொண்டர்களின் ஓட்டம்
கிடைத்தது பெப்சி!

தீபாவளி

ஊரெங்கும் திருவிழா
விண்ணில் கந்தகப் பூக்கள்
என் கண்களில் வெளிச்சம்
சிவகாசிக் குழந்தைகளின்
அலுமினியக் கைகள்!

ஆன்மீகம்

பற்றற்றிரு!
சாமியார் பேச்சுக்கு
மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்ஷன்
அரை கோடி!

About The Author

6 Comments

 1. Girijamanaalan

  தங்கள் இணைய தளத்துக்கு எனது கவிதை சமர்ப்பணம்

  முக்கனிச் சுவையோடு
  படையல்
  உதியோர் இல்லத்தில்
  மூச்சை நிறுத்திய
  அப்பாவுக்கு!
  – கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, இந்தியா.

 2. pramman

  தெச பட்ட்ருமிக்க கவிதை அருமை. cஒன்டினுஎ ஒf ந்ரிடெஇங்.

Comments are closed.