கவிதைப்பூக்கள்

ஒற்றுமை

ஒவ்வொருவர் வீட்டு
வாசலிலும்
எதிர்வீட்டுக் குப்பை
தொட்டி இல்லாத தெரு.

***

இப்படித்தான்

இஷ்டமான பொருளொன்று
இலவச இணைப்பென்றால்
தலைவலியைக் கூட
விலைகொடுத்து வாங்குகிறது
எம் பெண்ணினம்.
இது
டெலிஷாப்பிங்கின்
வியாபாரத் தந்திரமல்ல
தாலிக்காக
கணவனை வாங்கும்
எம் பெண்களின்
வாழ்க்கைத் தத்துவம்.

***

அனுதாப அலை

வெயிலில் கிடக்கும்
பிணத்தின் சூடு
உயிர்ப்பாக நம்பப்படும்
உணர்ச்சி வேகத்தில்
வைக்கோல் பொம்மைகளுக்கும்
வாழ்க்கை கிடைத்து விடுகிறது. 

***

About The Author

Momizat Team specialize in designing WordPress themes ... Momizat Team specialize in designing WordPress themes

4 Comments

 1. mnao

  ன்
  அயம்மிக்க வரிகள்
  தாலிக்காக
  கணவனை வாங்கும்
  எம் பெண்களின்
  வாழ்க்கைத் தத்துவம்

 2. PANDIYARAJAN

  அற்புதமான கவிதை,குறிப்பாக அந்த பெண்களின் தாலி தத்துவம். தாலிக்காக கணவனை வாங்கும் எம் பெண்களின் வாழ்க்கை தத்துவம்”.”

Comments are closed.