கவின் குறு நூறு-13

36

குழந்தை கவின்
அதிகாரம் அதிகாரமாய்க்
குறும்புகளை எழுதுகிறான்
தொகுத்து வெளியிட
வள்ளுவர் வருவாரா?
பாரதி வருவாரா? இல்லை
பாரதிதாசன் வருவாரா?

37

‘கீழே விழுந்து அடிபட்ட
பொம்மை அழவில்லையே’
அதற்காக அழுதான் அவன்.

38
கொஞ்சம் தண்ணீரைக் கொட்டினாலே
கோபிக்கிறாளே அம்மா
எவ்வளவு தண்ணீரை
இப்படி கொட்டுது வானம்?
ஏன் கேட்கவில்லை? ஏன் கோபிக்கவில்லை?

About The Author

1 Comment

  1. P.K.Sankar

    கவினின் அதிகாரங்களில் அதி காரம் கொண்ட குறும்பு எதுவும் இல்லை.
    அதிரசம் போன்ற அதி இனிமையான குறும்புகளே இடம் பெறும். தொகுத்து வெளியிட அனைத்துப் புலவர் பெருமக்களும் அணிவகுத்து வருவர்.இனிய கவிதைக்கு எனது பாராட்டுகள்.

Comments are closed.