கவின் குறு நூறு-17

50

குழந்தையின் மழலையைக் கற்பதற்கு
எந்த மொழிக்குத்தான்
ஆசை இருக்காது?

51

மாம்பழத்தை ‘மாயிம்’ என்கிறான் கவின்
மாந்தோப்புகள் உடனே அதைத் தம்
பிஞ்சுகளுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்து
நெஞ்சம் மகிழ்கின்றன.

52

ஆரஞ்சுப் பழத்தைக் கொண்டு வந்து
‘தாத்தாபுயி’ என்றான் கவின்
தித்திப்பின் முத்தத்தால்
உள்ளிருந்த சுளைகள்
திக்கு முக்காடிப் போயின.

53

முகவரி தவறிய குறும்புகள் எல்லாம்
கவின் ஆதரவில்
வளர்கின்றன எங்கள் இல்லத்தில்.

About The Author