கவின் குறு நூறு-18

54

கதவை யார் தட்டினாலும்
அவன் தான் திறப்பான் ஓடிப்போய்;
தட்டாமல் ஒரு நாள் உள்ளே
கால் வைத்துவிட்ட நண்பரை
வெளியே நிற்கவைத்துத்
தட்டச் சொல்லித் திறந்துவிட்டான்.

55

ஆயிரம் குறும்புகளின் அணிவகுப்பு
மரியாதையை ஏற்றுக்கொண்டு
அன்றாடம் கண்விழிக்கிறான்;
கைவிடப்பட்ட குறும்புகளின் கோரிக்கைகளைக்
கவனத்தில் கொண்டபடி தான்
கண்ணுறங்கப் போகிறான்.

56

அவனுடைய அட்டகாசக் காப்பியத்தின்
அத்தனைப் பக்கங்களையும் மனப்பாடமாக
ஒப்பிக்கமுடியும் அவனுடைய பொம்மைகளால்.

About The Author