கவின் குறு நூறு (19-21)

19

பூங்காத் தடாகத்தில்
வாத்துப் பார்த்துவந்த கவின்,
முற்றம் முழுக்கக் கொட்டினான தண்ணீர்;
பொம்மை வாத்து நீந்த வேண்டுமே!

20

‘இரண்டு மிட்டாய் தானே வேணும் இதோ’
என்று ஒன்றையே உடைத்து
இரண்டாக்கித் தந்தார் அப்பா;
அடுத்த நாள் ஒன்றுக்கு இரண்டு பேனா
மேசை மேல் அவன் அப்பா பார்த்தார்;
வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான் அவன்.

21

என் கவிதையிலிருந்த வார்த்தைகளை
ஒரு சேர அள்ளி வெளியே கொட்டியவன்
தன் வார்த்தைகளை நிரப்பிவைத்தான்;
படித்து முடிக்கவில்லை என் தாயின்
எழுதப்படாத கவிதையில்
வார்த்தைகளாய்க் கிடந்தேன் நான்.

About The Author

1 Comment

  1. P.K.sankar

    கவினின் கற்பனைத்திறனுக்கு மெருகூட்டும் விதத்தில் அமைந்துள்ள தமிழன்பனின் கவிதைகள் மிகவும் அற்புதம்.

Comments are closed.