கவின் குறு நூறு-24

73

‘கீய,கீயே..
கீய, கீயே..’
இடுப்பில் துணியில்லாத கவின்
கீரை விற்றுக் கொண்டு வந்தான்.
விலை என்ன? என்றதும்
சொன்னான் ‘அஞ்சு உவா’
வாங்கிக் கொண்டோம்.
அடுத்த கணம் கீரை உலகம்
பசுமையை நெஞ்சில் பரப்ப
அவன் அம்மாவின் கைவளையலைக் கழற்றி
‘வய்யல் வய்யல்’ என்று விற்று வந்தான்
விலை என்ன என்றதும்
சொன்னான் ‘அஞ்சு உவா’.
தங்கமும் கீரையும் சமமாய்ச் சங்கமமான
அவன் உதட்டு ‘அஞ்சு உவாய்’க்கு
விலைபடப் பிரபஞ்சமே நெஞ்சம் துடித்தது.

About The Author