காதல் கவிதைகள்

என்
மனசு முழுக்க
நிறைந்திருக்கும்
உன்னைத்தான்
பூங்காவில்
உன் தோழிகள்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்

***

நாளுக்கு நாள்
உன்னுடைய
சகதோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டேபோகிறது
ஆனால்
உனக்கு மட்டும் தான் …….
அழகு கூடிக்கொண்டே போகிறது

***

நேற்று
விடாது
பெய்தது…….
மழை
உன்
வாயாடி பேச்சை
நினைவுபடுத்தியபடியே

*** 

இவ்வுலகின்
அதிஅற்புதமான
கவிதை…
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது

*** 

பிறந்த குழந்தையின்
பிஞ்சு விரல்களின்
மென்மையை
தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்….
உன் வார்த்தைகளில்

***

உன்
அழுகையைக்கூட
அதிசயித்தே
பார்க்கும்
என் காதல்

***

About The Author

3 Comments

  1. bala

    இனிய அழகிய கவிதை மழையில் நனைந்த மலர்கள் போல்

  2. nandhini

    காதலில் உரந்து போன உமது வரிகல் அருமை…..

  3. Nagarajan

    பிறந்த குழ்ந்தையின் என்ற கவிதை மிகவும நன்றாக உள்ளது

Comments are closed.