காதல் சிறகு (2)

உன்னைப் பின்தொடர்கிறேன்
உன் நிழலின் மீது
கால் பதியாமல்.

*********

புத்தாண்டில் எது
வாங்குகின்றோமோ
அது நிறையுமாம்;
தயவு செய்து ஒரு
முத்தம் கொடேன்!

*********

நான் காகிதமாக
உன்னைக் கடந்து
செல்கிறேன்.
உன் நிழல் பட
கவிதையாகிறேன்.

*********

இனிக்கும் இதழில்
தேன் பருக
நடுநிசியில் வந்து
இறங்கும் நிலவு.

–சிறகு விரியும்...

About The Author