காதல் சிறகு (3)

உன்னிடம் காதலை
தெரிவிக்க
ரோஜாச் செடியை
விதவையாக்கினேன்.

*********

உன்னிடமிருந்து சிறு புன்னகை
உதிர்கிறது.
அதைப் பார்த்து எத்தனை
பூக்கள் மலர்கிறது!

*********

ஜன்னலோர இருக்கையில்
நீ கை அசைத்து
போனபோது
விடைபெற்றது சூரியன்!
மிச்சமிருந்த வெளிச்சம்
உன்னைத் துரத்திச் சென்றது.

–சிறகு விரியும்…

About The Author