காதல் சிறகு (4)

நேற்று உன்னை
குளத்தில் பார்த்தேன்
மீன்கள் கொடுத்து வைத்தவை.

******

செடியில்
இரண்டு பூக்கள்
உன்னையும் சேர்த்து.

******

குளிரில் மேனி
கதகதப்பாய் இருக்கிறது
உனது நினைவுகளால்.

******
வேண்டுதல்களோடு
வடம் பிடித்தேன்
நிலைக்கு வந்த
தேரின் அருகில்
நீ தரிசனம் தந்தாய்.

–சிறகு விரியும்…

About The Author