காதல் சிறகு (5)

காதல் பயணிகள்
எந்த நிறுத்தத்திலும்
இறங்க மாட்டார்கள்.

******

நான் அடம் பிடித்தால்
வாங்கிக் கொடுப்பார்களா
உன்னை.

******

உனது பெயரைக்
கொண்டவர்களிடம்
ஏனோ தோற்றுவிடுகிறேன்.

******

உன் கன்னக் குழியில்
தடுக்கி விழுந்த என்னை
யாரும் காப்பாற்ற வேண்டாம்

–சிறகு விரியும்…

About The Author