காதல்

உணர்ந்தவர்கள் மட்டுமே
உரை எழுத முடிகின்ற
உன்னதமான உணர்வு
கண்களால் விதையெடுத்து
இதயத்தில் நடப்படும்
ஒரு மலர்ச்செடி
காற்றுப் புகாத
கண்டங்களிலும்
கண்டிப்பாய் நுழைந்திருக்கும்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உருகுவதே இதன் குணம்
சோகமே பிடித்தமான “ரசம்”
காவியங்கள்
பல கொடுத்தாலும்
கர்வமில்லாதது…
இது
சில பேரால் தூற்றப்படும்!
சில பேரால் போற்றப்படும்!
சில பேரைப் பைத்தியமாக்கும்!
சில பேரை ஞானியாக்கும்! – ஆனால்
அனைவரையும் கவிஞனாக்கும்!!!!

About The Author

3 Comments

  1. மார்கண்டேயன்

    வாழ்துகள் தேவராஜன், காதலை கடினமின்றி கதைத்துள்ளீர்கள், இன்னும் பல காதலை (கவிதையை) நீங்கள் களிப்புடன் கதைக்கவேண்டும்.

    மனம் நிறைந்த காதலோடு, மார்கண்டேயன்.

Comments are closed.