காய்கறிப் பால் அல்வா

தேவையான பொருட்கள்:

கேரட் – 100 கிராம்
பச்சைப் பட்டாணி – 50 கிராம்
சீமைக் கத்தரிக்காய் – பாதி
தேங்காய் – ஒரு மூடி
நெய் – 1 கப்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 600 கிராம்
ஏலக்காய் – 4, முந்திரி – 8

செய்முறை:

கேரட், சீமைக் கத்தரிக்காய் இரண்டையும் தோல் சீவி, நன்றாகக் கழுவி, துருவிக் கொள்ளுங்கள். இத்துடன் உரித்த பட்டாணியையும் சேர்த்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அது வேகுவதற்குள் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பிறகு, வெந்த கறிகாய், துருவிய தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின், அடி கனமான ஒரு பாத்திரத்தில் இந்த அரைத்த விழுதைப் போடுங்கள். அத்துடன் பால், சர்க்கரை, நெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளற வேண்டும். முதலில், அடுப்பைச் சற்றுப் பெரியதாக எரிய விட்டு, கலவை கொதி வந்ததும் குறைத்து விட வேண்டும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, சீவிய முந்திரிகளால் அலங்கரித்து, வெள்ளிக் காகிதம் ஒட்டித் துண்டு போடுங்கள்.

புதுமையான, ஊட்டம் தரும் காய்கறி அல்வா தயார்!

About The Author