காரட் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

துருவிய காரட் 1 கப்
மிளகாய் தூள் 1/2 கப்
உப்பு 1/4 கப்
எண்ணெய் 1/4 கப்
வெல்லத்தூள் 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
வினீகர் 1 டீஸ்பூன்

செய்முறை

காரட்டை நன்றாக அலம்பி துடைத்து துருவிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் மேலே குறிப்பிட்டிருக்கும் என்ணெயின் அளவில் பாதியை ஊற்றி கடுகு தாளித்து துருவிய காரட்டையும் மஞ்சள் தூளையும் போட்டு கிளறவும். காரட் நன்றாக வெந்ததும் உப்பு.மிளகாய் தூள் சேர்த்து, மிளகாய் வாசனை போக பத்து நிமிடங்கள் கிளறவும். எல்லாம் நன்றாக ஒன்று சேரும் போது வெல்லத்தூளைப் போட்டு வினீகரை ஊற்றி இறக்கி வைக்கவும். மீதியிருக்கும் எண்ணெயை சூடாக்கி,  பின் நன்கு ஆற வைத்து இறக்கி வைத்த ஊறுகாயில் ஊற்றவும்.

About The Author