காலத்திற்கு ஒரு நாள் முந்தி

அன்று
ஒரு மழை நாளில்
என் விழிகள், உன்னை
எனக்கு வழங்கிய
போது
காலம் எனது
சாளரத்தில்
பூக்களைப் பொழிந்து
புன்னகைத்தது.

பின்பு
இலையுதிர்கால
நாள் ஒன்றில்….
சம்மதமா? என்று நான் கேட்க
நீ
சாதித்த மவுனத்தில்
இரவு பகல்
இமைகள் அசைவற்றுப் போகக்
காலம்
அதிர்ந்து நின்றது.

நேற்று –
கோடையில் நீ…..
கொடுத்தனுப்பிய
திருமண அழைப்பிதழை
என்னிடம்
நீட்டிவிட்டுத் திரும்பிய
காலம் எனது
வாசற்படியில்
தலைசுற்றித் தடுமாறி
விழுந்தது.

About The Author