காலிபிளவர் மிளகுக்கறி

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் பெரியது – 1
வெங்காயம் – 2
இஞ்சி – பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 3
கொத்துமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

காலிபிளவரைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்புப் போட்ட வெந்நீரில் ஐந்து நிமிடம் போட்டு வையுங்கள்.

வெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

சிறிது வதங்கியவுடன் மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது போட்டு வதக்குங்கள்.
பின்னர், காலிபிளவரையும் போட்டு வதக்கி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்க வேண்டும்.

காலிபிளவர் நன்கு வெந்ததும் மிளகுத்தூளைத் தூவி நன்கு கிளறினால் சுவையான காலிபிளவர் மிளகுக்கறி தயார்! கொத்துமல்லி தூவிப் பரிமாற வேண்டியதுதான்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author