கீரைப் பக்கோடா

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு – 2 கோப்பை
அரைக் கீரை – 1 கட்டு
வெங்காயம் – 3
புதினா, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு
மிளகாய் வற்றல் – 2
பச்சை மிளகாய் – 3
சோம்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில், கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்பு, பருப்புடன் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கரகரப்பாக அரைத்தெடுக்க வேண்டும்.

பிறகு, வெங்காயம், அரைக் கீரை, மல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அவற்றோடு அரைத்த பருப்பையும் உப்பையும் சேர்த்துப் பிசையுங்கள்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவைச் சிறிது சிறிதாக எடுத்துச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

அவ்வளவுதான், சுவையான ‘கீரைப் பக்கோடா‘ தயார். சுடச் சுடச் சாப்பிடச் சுவையாக இருக்கும். தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டால் சுவை கூடும்.

சுவைத்துப் பார்த்து, எப்படி இருந்து என மறவாமல் கருத்துப் பெட்டியில் தெரிவியுங்கள்!

About The Author