குறுங்கவிதைகள்

உலர்ந்த துணிகளை
மடிக்கும் போதெல்லாம்
உறுத்துகிறது
இல்லாத ஆடைகள்
அம்மாவின் மறைவு!

******

தலை துவட்டி விடத்
தோன்றுகிறது
ஒவ்வொரு மழைக்குப் பிறகும்
ஈரம் சொட்டச் சொட்ட
நிற்கும்
மரங்களைப் பார்க்கும்போது!

******

நீ வந்து விடக் கூடாது
என்று புத்தியும்
வரவேண்டும்
என்று மனசும்
சொல்கின்றன
என் நண்பர்களோடு
நிற்கையில்!

About The Author

1 Comment

Comments are closed.