குழந்தைகள் மனம் கவரும் மதிய உணவு

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் அம்மாக்கள் எதிர்கொள்ளும் குழப்ப சூழ்நிலைகளில் ஒன்று, குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரிப்பது!

தினமும் குழந்தைகளுக்கு மதிய உணவு என்று எதையோ ஒன்றினைத் தயாரித்தால் போதாது. உணவு சத்துள்ளதாகவும், சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்டால்தானே படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியும்?

அப்படியென்றால் குழந்தைகள் மனம் கவரும் உணவை சமைப்பது எப்படி?

எப்போதும் ஒரே மாதிரியான இட்லி, தோசை செய்தாலும்கூட விதவிதமான வடிவத்தையும் நிறத்தையும் பயன்படுத்துங்கள். செயற்கை வண்ணங்கள் சேர்க்காமல், ஒரு நாள் ரவை சேர்த்து தோசை செய்யலாம், அடுத்த நாள் கோதுமை தோசை, அதற்கடுத்த நாள் கேள்வரகு தோசை என மாற்றும் போது குழந்தைகளுக்கு சுவாரஸ்யம் ஏற்படும். தோசையும் இட்லியும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் பொம்மை வடிவில் செய்து அவர்களைக் கவரலாம். பல வண்ணக் காய்கறிகளைச் சேர்த்து இன்னும் கவர்ச்சி ஏற்றலாம்.

வெரைட்டியாய சாண்ட்விச், சப்பாத்தி ரோல், பிட்ஸா, குக்கீஸ் என்று காலத்திற்கு ஏற்றாற்போல மாறுங்கள்!

ஒவ்வொரு நாளும், புதுப்புது உணவைத் தயாரித்து குழந்தைகளை ஆர்வத்துடன் உணவு உண்ண ஈடுபடுத்துங்கள். டிபன் பாக்ஸைத் திறப்பதற்கு முன் உங்கள் குழந்தை, ‘இன்று அம்மா என்ன வைத்திருப்பார்?’ என்று எதிர்பார்க்க வையுங்கள்.

குழந்தையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல தினந்தோறும் பழங்கள், காய்கறிகள், புரத உணவு, பிஸ்கட் என்று விதவிதமாக வைத்து அசத்துங்கள்!

பழம் என்றால் ஒரு நாள் ஆப்பிள், ஒரு நாள் வாழைப்பழம், ஒரு நாள் ஆரஞ்சு என்றும் மாற்றுங்கள். ‘மாற்றம்தானே மனிதத் தத்துவம்!’ இந்த சின்னச் சின்ன மாற்றங்கள் குழந்தைகளிடம் மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அல்லவா!

நேற்று இரவு நீங்கள் செய்த இட்லி அல்லது சப்பாத்தி மீந்து விட்டதா? அதையே குழந்தைகளுக்கு கொஞ்சம் மாற்றிக் கொடுங்கள். இட்லியைக் காய்கறிகளுடன் சின்னச் சின்னதாக கட் பண்ணிப் போட்டு, ‘மஞ்சூரியன்’ என்று பெயரிடுங்கள். சப்பாத்தியையும் காய்கறிகளுடன் வதக்கிக் கொடுங்கள். உங்கள் நேரமும் மிச்சமாகும், பொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்! உணவு சத்துள்ளதாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடிய வகையில், அவர்களைக் கவர்வதாகவும் இருக்க வேண்டும். கடைகளில் ரெடிமேடாக வாங்கும் உணவுகளை விட, நீங்களே தயாரிக்கும் உணவு வகைகள் சத்துள்ளதாகவும், சுத்தமானதாகவும் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் போது அதில் குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் உலகில், குழந்தைகளுக்கு வித்தியாசமாக உணவு செய்வது பற்றிய பல இணையதளங்கள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன. அவற்றைப் பார்த்து பல புது உணவுகளைச் செய்யுங்கள். குழந்தைகளோடு இணையதளத்தில் தேடுங்கள். நாளைய மதிய உணவு தயாரிப்பதில் அவர்களுக்கும் கொஞ்சம் பங்கு இருக்கட்டுமே! அவர்களுக்குப் பிடித்தவற்றை, பிடித்த முறையில் அவர்களின் துணையுடன் செய்யும் போது, ‘குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கின்றன’ என்ற உங்கள் குறைபாடு நீங்கிவிடும்தானே!

குழந்தைகள் எடுத்துச் செல்லும் லஞ்ச் பாக்ஸ் கூட பார்ப்பதற்கு வித்தியாசமானதாக, குழந்தைகள் விரும்புவதாக இருக்க வேண்டும்.

அம்மாக்களே! நீங்கள் காலத்திற்கு ஏற்றாற்போல கொஞ்சம் மாறி, கொஞ்சம் உங்களுடைய கற்பனையையும் சேர்த்தால், குழந்தைகள் விரும்பும் உணவை சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் செய்ய முடியும். சத்தான உணவு குழந்தைகளின் கவன சக்தியை அதிகரித்து பள்ளியில் சிறந்த மாணவக் கண்மணிகளாகத் திகழ வைக்கின்றது. அதுதானே நீங்கள் எதிர்பார்ப்பதும்!

About The Author

8 Comments

 1. sudhanarasimhan

  சித்ரா பாலு அவர்கள் எழுதிய குழந்தைகளுக்கான மதிய உணவு பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது.குழந்தைகளை சாப்பிட வைக்க போராடும் தாய் மார்கள் இந்த கட்டுரையை அவசியம் படிக்கவேண்டும்.

 2. ramesh

  மிகவும் பயனுள்ள கட்டுரை.
  மிகவும் நன்றி.
  வாழ்த்துக்கள்.

 3. ramesh

  மிகவும் பயனுள்ள கட்டுரை.
  மிகவும் நன்றி.
  வாழ்த்துக்கள்.

 4. shankari

  திச் அர்டிcலெ இச் ரெஅல்ல்ய் வெர்ய் உசெfஉல் fஒர் பரென்ட்ச். வெர்ய் நிcஎ அர்டிcலெ. வெர்ய் கப்ப்ய் டொ ரெஅட் திச் .கேப் இட் உப்.

Comments are closed.