குழந்தை பிறப்பு

இப்போது
காலங்கள் மறந்து
ஐம்பதடி பின்னகர்கிறேன்
வீழ்கிறேன்
குப்புற
மறந்து போன எனது
குழந்தைப்பருவத்தினுள்
கதவுகளே
வாயில்கள்
வாயில்களோ
நுழைவாயில்கள்
எனக்குள்ளே
ஒடுங்கி
ஓடுகிறேன்
எல்லா இடமும்
விழுந்தும்
ரத்தம் சிந்தியும்
காயங்களை
எல்லோரும் பார்க்க

இப்போது
எனது
உட்புறம்
வெளித்தெரிய
உடுத்துகிறேன்
என் எண்ணங்களோ
கடைகின்றன
சந்தேகங்களுக்குள்
முற்றுப்புள்ளி
அந்நியமாகி
அந்நிய
அதிசய
காலங்களின்
வீட்டில்
ஒரு விருந்தாளியாய்

உறங்குகிறேன்
இப்போது
ஒரு கேள்விக்குறியுடன்
பிறகு,
எழுகிறேன்
ஒரு ஆச்சரியக்குறியான
பெருமூச்சில்

இப்போது
சொற்களற்ற பிரார்த்தனையில்
இறையை
மறுகண்டுபிடிப்புக்குட்படுத்தி
அல்லது
இருக்கும் வாய்ப்பை
கேள்விக்குட்படுத்தி
கேவுகிறேன்
சோர்வுடன்
சாய்க்கிறேன்
தலையை ஓய்வுக்காக
வாழ்க்கையை கண்டுபிடிக்கவும்

(சொற்கள் தோற்கும்பொழுது – மின்னூலில் இருந்து)

About The Author