கேரட் கோவா

தேவையான பொருட்கள்:

கேரட் – 1/4 கிலோ
பால் – 3 லிட்டர்
சர்க்கரை – 1/4 கிலோ
நெய் – இரண்டு மேசைக்கரண்டி
திராட்சை – 12
முந்திரி – 12
ஏலக்காய் – 3

செய்முறை:

பாலை அகன்ற பாத்திரத்தில் காய்ச்சி, பின் சிறு தழலில் பாலை வைத்துக் கொள்ளவும். கேரட் துண்டுகளை மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வேறொரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, கேரட் அரைத்ததையும் அதனுடன் சேர்த்து சிறு தீயில் அடி பிடிக்காமல் கிளறவும். சிறிது குறுகியதும், சர்க்கரை சேர்த்து மேலும் கிளறவும்.

பால் பாதியளவு சுண்டியதும் அதையும் கேரட் விழுதுடன் சேர்த்து மீண்டும் கிளறவும். அடி பிடிக்காது தொடர்ந்து கிளறி சிறிது நெய் சேர்த்து ஏலப்பொடி தூவி விடவும்.

வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது குளிர வைத்து வில்லைகளாக செய்து கொள்ளவும். பின் முந்திரி , திராட்சையைக் கொண்டு அலங்கரிக்கவும்.”

About The Author