கேரட் தேங்காய் கேக்

தேவையான பொருட்கள்:

தேங்காய்த் துருவல் 1 கப்
கேரட் துருவல் – 1கப்
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 4 கப்
முந்திரி – 6
நெய் – 1/4 கப்
ஏலக்காய் – 4
பால் – 1 கப்

செய்முறை :

தேங்காய்த் துருவல், கேரட் துருவல், ஊற வைத்த முந்திரிஆகியவற்றை 3/4 கப் பால் விட்டு மசிய அரைக்கவும். அரைத்த விழுதுடன் சர்க்கரை, கடலை மாவு போட்டு ஒன்றாகக் கலந்து மட்டான தழலில் அடிப் பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்றாகத் திரண்டு வரும் பொழுது ஏலப்பொடி தூவி நெய்யை ஊற்றிக் கிளறவும். பின் சூடான நிலையிலேயே தாம்பாளத்தில் கொட்டி வில்லைகள் போடவும்.

About The Author