கொஞ்சம் சிரிக்கலாமே!

"சீட்டு கம்பெனி நடத்தப் போறேன்னு சொல்றியே. உனக்கு என்ன தகுதி இருக்கு? இதுக்கு முன்னாலே என்ன வேலை பார்த்துட்டு இருந்தே?"

"திருநெல்வேலியிலே அல்வா கடையிலே வேலை பார்த்துட்டு இருந்தேன்."

*****

"நடிக்க வந்திருக்கியே.. பாடி லேங்வேஜ்ன்னா என்னன்னு தெரியுமா? முன் அனுபவம் இருக்கா….?"

நாயுடு ஹால் கடையில் 10 வருஷம் வேலை பார்த்த அனுபவம் பத்தாதா ஸார்?"

*****

"நல்லா பஞ்ச் டயலாக் எழுதத் தெரிஞ்ச ஆளைக் கூட்டிட்டு வான்னு சொன்னா.. இது யாருயா.. உடம்பு பூரா பஞ்சு ஒட்டிட்டு…?"

"நீங்கதானே கேட்டீங்க…பஞ்ச் டயலாக் எழுதணும்னு! அதான் நேரே திருப்பூர் காட்டன் மில் போயி இழுத்துட்டு வந்திருக்கேன்."

*****

"எதுக்கு ஆட்டோவைக் கொண்டு வந்திருக்கே…? நான் கேட்கலியே…!"

"நல்லா குலுங்கி குலுங்கி சிரிக்கிற மாதிரி ஜோக் எழுதிட்டு வான்னு சொன்னீங்களே! இதை ஆட்டோவுலே போயிட்டேப் படிங்க… என் திறமை புரியும்!"

*****

"எங்க வீட்டு கால்குலேட்டர் இன்னும் ஆளையே காணோம்!

"அது யாரு சார்.. உங்க வீட்டுக் கால்குலேட்டர்?"

"வீட்டு வேலை செய்ற பொண்ணுதான்! வீட்டைக் கூட்டிப் பெருக்கி குப்பையை வெளியே கொண்டு போய்க் கழிப்பா!"

"அப்போ வகுத்தல் பண்ண மாட்டாளா….?"

"ஓ! பண்ணுவாளே… சம்பளம் சரியா தரலேன்னா வகுந்திடுவா!!"

About The Author

3 Comments

  1. akilseetha

    டமில் நகைசுவை எல்லமெ ரொம்ப ரசிக்கும்படி இருன்தது நன்ரி அய்யா

Comments are closed.