கோழிக்கறிக் குழம்பு

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி – அரை கிலோ
வெங்காயம் – 3
தக்காளி – 2
இஞ்சி–பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைக்க:

சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – 2
லவங்கம் – 2
ஏலக்காய் – 2
சிவப்பு மிளகாய் – 10
மிளகு – 1 தேக்கரண்டி
தேங்காய் – 4 கீற்று
கசகசா – சிறிது

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 1
ஏலக்காய் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய், கசகசா தவிர மற்ற அனைத்தையும் தனித்தனியாக வறுத்து மின்அம்மியில் (மிக்ஸி) அரைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காயையும், கசகசாவையும் ஒன்றாக அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி பட்டை, ஏலக்காய் போட்டுத் தாளித்து, அரைத்த மசாலாப் பொடியைப் போட்டு வதக்கி, கறியையும் சேர்த்து நன்றாக வதக்கி, உப்புச் சேர்த்து 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடுங்கள். பின்பு, தேங்காய்-கசகசா கலவையை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு கறிவேப்பிலை போட்டு மூடிவிடுங்கள்.

சுவையான கோழிக்கறிக் குழம்புத்  தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author