கோழி சூப்

தேவையான பொருட்கள்:

கோழி – 200 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 1
இஞ்சி-பூண்டு விழுது – – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி –  1/4 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சோம்பு – 1/4 தேக்கரண்டி
சீரகம் –  1/4 தேக்கரண்டி
மிளகு –  1/4 தேக்கரண்டி
மிளகு-சீரகத் தூள் – 1½  தேக்கரண்டி
கொத்துமல்லி – சிறிதளவு
எண்ணெய், தயிர், உப்பு – -தேவையான அளவு

செய்முறை:

முதலில்,கோழியை நன்கு கழுவிச் சிறிது தயிரில் ஊற வைக்க வேண்டும்.

அடுப்பில் குக்கரை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ,சோம்பு, சீரகம், மிளகு போட்டுத் தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி- பூண்டு விழுது முதலியவற்றைப் போட்டு வதக்கி, கோழியையும் போட்டு வதக்கி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு போட்டுத் தேவையான அளவு தண்ணீரில் வேக விட வேண்டும்.

கறி நன்கு வெந்ததும், பின் குக்கரை திறந்து மிளகு- சீரகத் தூள் தூவி  கொத்தமல்லி இலை போட்டு இறக்க வேண்டியதுதான்.

சுவையான ‘ கோழி சூப்’ தயார்! !சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author