கோழி-புதினா கிரேவி

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி – ¼ கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
புதினா – 1 கட்டு
மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது – ½ தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில், கோழிக்கறியை நன்றாகக் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பின், புதினாவை ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு, வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு வதக்க வேண்டும்.

பிறகு, கோழிக்கறியைப் போட்டு வதக்கி, பின்னர் தக்காளி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்புப் போட்டு வதக்க வேண்டும்.
கடைசியாக, தேவையான அளவு நீர் விட்டு, அத்துடன் புதினாவையும் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடம் வேக விட வேண்டும்.
வெந்தவுடன் குக்கரைத் திறந்து, கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள்.

அவ்வளவுதான், சுவையான ‘கோழி-புதினா’ கிரேவி தயார்! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author