சந்தவை

புது வருஷம் முதல் நாளுன்னா காலையில் எழுந்து முக்கனிகளையும் பார்க்கற மாதிரி சந்தவை செய்து சாப்பிடுவதும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு மரபு. இந்த புது வருஷத்துக்கு நீங்களும் செய்து பாருங்க எங்க ஊர் சந்தவையை. கடையில் விற்கும் சந்தவையை வாங்கி வந்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து தாளித்தால் சந்தவை ரெடி! அதில் என்ன கஷ்டம் என நினைக்கிறீங்களா?.பழைய பாரம்பரியத்தோட புதுவகைகளையும் சேர்த்து விதவிதமான சந்தவையால் எங்க வீட்டு சமையலறை மணக்கும். நீங்களும் வெரைட்டியா பண்ணி வீட்டில் உள்ளவங்களை அசத்த வேண்டாமா!?.
முதலில் சந்தவை மாவு தயாரிக்கறதைப் பார்ப்போமா? 3 பங்கு அரிசிக்கு 1 பங்கு உளுந்து, ஒரு கையளவு வெந்தயம் எடுத்து தனித்தனி பாத்திரத்தில் 8 மணிநேரம் ஊற வைக்கனுணும். இரவு படுக்கச் செல்லும் முன் ஊற வைத்தால் காலையில் அரைக்க சரியாக இருக்கும். ஊற வைத்த பொருட்களை இட்லிக்கு அரைப்பது போல் கொஞ்சம் கெட்டியா அரைச்சு,தண்ணி ஜாஸ்தி விடாடமால் பாத்திரத்தில் எடுத்துக்கங்க.
இட்லிக்கு போல் சில மணிநேரம் புளிக்க வைக்கத் தேவையில்லை.மாவு தயாரானவுடனே இட்லிப் பாத்திரத்தில் இட்லிகளாக ஊத்துங்க. வெந்ததும், சூட்டோட சூடா சந்தவை அச்சுல போட்டு பிழியனுணும். அச்சோட அடிப்பகுதியில் வாழை இலை விரிச்சு சந்தவையை பிடிக்கனும். வாழையிலை பயன்படுத்தினா சூடு சீக்கிரம் குறையும். அதோட நிறைய இட்லிகளை ஒரே இலையில சந்தவையா பிழியலாம்.
சந்தவை பிழிஞ்சதுக்குப் பின் அதை ஆற விடவேண்டும்.அதற்குள் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்க. நறுக்கிய வெங்காயத்தோட உங்களுக்கு தேவையான அளவு காரம் சேர்த்து வாணாலியில 3 தேக்கரண்டி எண்ணை விட்டு, கடுகு, உளுத்தன்ம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
போட்டு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி வையுங்க. இந்தக் கலவையும் சூடு ஆறின பின் ஆறிய பிழிஞ்ச சந்தவையுடன் உங்களுக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பறிமாறுங்க. நான் சொன்னது 6 இட்லிக்கான அளவு. கிராமத்தில இருக்கிற இட்லி பாத்திரத்தில இட்லி சுட்டுட்டு அளவு தப்புன்னு சொல்லிறாதீங்க.எடிட்டரம்மா அடுத்தமுறை வாய்ப்பு தரமாட்டாங்க. இட்லிக் குக்கரில் சுட்ட 6 இட்லியை சந்தவையாக்கனும்.
இனிப்புச் சந்தவைக்கு ஆறின சந்தவையோட உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை கலந்ததால் இனிப்பு சந்தவை ரெடி!
நான் சொன்னது இரண்டும் எப்போதும் எங்க வீட்ல செய்யறது. அதில வெரட்டி செய்யலாம்னு நான் செய்ய ஆரம்பிச்சத்துதான் தக்காளி, புளி,எலுமிச்சை சந்தவை.
இந்த மூணு வகைக்கும் முன்னாடி சொன்ன மாதிரியே வெங்காயம், பச்சை மிளகாயுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை எல்லாத்தையும் வாணாலியில வதக்கி அதனுடன் தக்காளி சந்தவைக்கு இரண்டு பொடியாக நறுக்கிய தக்காளியையும் வதக்கி, உப்பு சேர்த்து, ஆற வைத்து, பிழிஞ்சு ஆறிய சந்தவையை கலந்தால் தக்காளி சந்தவை ரெடி!
புளி சந்தவைக்கு ஒரு சிறிய புளி உருண்டையை தண்ணீரில் கரைத்து, உப்பு சேர்த்து, தாளிக்கும் பொருட்களுடன் கொதிக்க வையுங்க. ஆறின பின்னாடி, பிழிஞ்ச சந்தவையைக் கலந்ததால் அதுதான் புளி சந்தவை.
புளிக்குப் பதிலா, எலுமிச்சைச் சாறு கலந்து பண்ணினா, அது எலுமிச்சை சந்தவை.
எங்கே கிளம்பிட்டீங்க ! சந்தவை செய்யவா? கொஞ்சம் பொறுங்க. இதிலேயும் வெரைட்டி பண்ணலாம். எப்படிங்கிறீங்களா?
கைமுறுக்கு அச்சு வீட்டீடில் இருந்தால் அதில் இட்லியை பிழிஞ்சா, ஒவ்வொரு அச்சுக்கும் பூ, ஸ்டார், நீளம், செவ்வகம் என வெவ்வேறு உருவத்திலல் செய்யலாம். அதிலே உங்களுக்குப் பிடிச்ச சுவையில செய்யலாமே! உங்க வீட்டு சுட்டிகளுக்கு நூடுல்ஸ்க்கு பதிலா விதவிதமான சந்தவை செய்து அசத்துங்க! நூடுல்ஸைவிட சீக்கிரம் ஜீரணமாயிரும், எங்க வீட்டு சந்தவை மெனு.
 Santhavai  Santhavai Santhavai
 Santhavai  Santhavai

About The Author