சந்நிதி

நெஞ்சு நிமிர்ந்தோர் நடையிட்டு
நெளியும் அலட்சிய நகை செய்து
என்னில் இங்கு பெரியோன் யார்-
என்று நுழைந்தேன் மிடுக்கோடு

அங்குள படிதனில் கால்தவறி
அம்மா என்றே கீழ்வீழ
பொங்கும் கருணைத் தேவியளின்
பங்கயத் தாள்கள் கரம் பற்றும்

About The Author