சப்பாத்திக்கு உகந்த பக்க உணவு – மலாய் கோபி

தேவையான பொருட்கள்:

நறுக்கிய தக்காளித் துண்டுகள் – 1/2 கப்
நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள் – 1 கப்
நறுக்கிய வெங்காயத் துண்டுகள் – 1 கப்
சர்க்கரை – சிறிது
பால் பவுடர் – 1/2 கப்
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி
எண்ணேய், உப்பு – தேவைக்கேற்ப
கொத்துமல்லித் தழை – சிறிது
தண்ணீர் – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைக் காய வைத்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத் துண்டுகளை மிக்சியில் விழுதாக்கி, அதனையும் சிறிதளவு சர்க்கரையையும் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் தக்காளித் துண்டுகளை மிக்ஸியில் விழுதாக அரைத்துச் சேர்த்து, சற்று வதக்கிப் பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரையில் வதக்கவும்.

பால் பவுடருடன் சிறிதளவு தண்ணீரை சேர்த்துக் கரைத்து அதனுடன் சேர்த்துக் கிளறவும். காலிப்ளவரைக் கழுவித் துண்டுகளாக்கி வேக வைத்துச் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

தேவையான அளவு தண்ணீரை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மூடி வைத்துக் கொதித்தவுடன் கொத்துமல்லித் தழையைக் கழுவிப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். மலாய் கோபி தயார்.”

About The Author