சப்பாத்திக்கு உகந்த பக்க உணவு – மல்டி விட்டமின் சட்னி

தேவையான பொருட்கள்:

தேங்காய் – ஒரு மூடி
பழுத்த தக்காளிப் பழங்கள் – 4
உரித்த பூண்டுப்பற்கள் – 20 முதல் 25
சின்ன வெங்காயம் உரித்தது – 20 அல்லது 25
கறிவேப்பிலை – 4 கொத்து
கொத்து மல்லி – ஒரு கட்டு
மேல் தோலை சீவிக் கழுவிய இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 4
வற்றல் மிளகாய் – 4
கேரட் – சிறியது ஒன்று
பொட்டுக்கடலைப்பருப்பு – 1/2 கப்
பெருங்காயம் – சிறிது
உப்பும், எண்ணெயும் தேவைக்கேற்ப
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிது (தாளிக்க)
புதினா இலை – சிறிது (விரும்பினால்)

செய்முறை:

ஒரு கடாயியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி விட்டுப் பின்பு பூண்டையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, நறுக்கிய கேரட் துண்டுகளெல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பெருங்காயத்தைப் பொரித்துக் கொண்டு, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு மிக்சியில் தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை, உப்பு மற்றும் வதக்கிய பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு அரைத்து எடுக்கவும். கடைசியாக கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பைத் தாளித்துச் சேர்க்கவும். புதினா இலைகளையும் விரும்பினால் தாளிக்கையில் சேர்க்கலாம்.

About The Author