சப்பாத்திக்கு உகந்த பக்க உணவு – தக்காளி வெங்காயச் சட்னி

தேவையான பொருட்கள்:

நாட்டுத்தக்காளி (அ) பெங்களூர்த் தக்காளி -1/4 கிலோ
சிகப்பு மிளகாய் – 5
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
உப்பு , எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க

செய்முறை:

தக்காளியையும் வெங்காயத்தையும் துண்டுகளாக்கவும். உப்பும், சிகப்பு மிளகாயும் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடாயியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும். சுருள வதக்கி இறக்கவும்.

About The Author