சமிக்ஞை

எலும்புருவான
எல்.ஐ.சி
நாணய சம்பந்தர்
திருவருளால்
புத்துயிர்த்து நிற்கும்
அண்ணா சாலை
குறுக்கில் கடக்க
நிற்கிறேன்…..
போகும் போகும்
வண்டிகள் வண்டிகள்
சிவப்பு விளக்கு
எப்போது எரியும்?
பச்சை அதை
எப்போது தொடரும்?
என்னோடு இருவர்
மூவர்…இதோ…பத்து
பலர்…..
கறுப்பு வகிட்டில்
வண்டிகள் வண்டிகள்
இன்னும்
சிவப்பு இல்லை
இப்போது இருநூறு
முந்நூறு ஆயிரம் பல்லாயிரம்
கைகள் பிணைந்து
கனத்த
கோட்டையாய்…
சிவப்புச் சமிக்ஞை
இன்னும் இல்லை….
எனினும் – கடக்கிறோம்
கடந்து கொண்டிருக்கிறோம்.

About The Author