சற்றே நகுக!

பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.

"இறந்து போனவர் ஒருவரைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். எவ்வளவு சார்ஜ் ஆகும்?"

"ஒரு அங்குலத்திற்கு இருபது ரூபாய்"

"இறந்து போனவர் ஆறடி உயரம். அவ்வளவு செலவு செய்ய எனக்குக் கட்டாது."

***

அவள் : உங்க வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கா?

மற்றவள் : இருக்கார்.

***

நண்பர் (சினிமா தயாரிப்பாளரிடம்) : உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?

தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே!

***

அவள்: இந்த ஆஸ்பத்திரியிலேதான் என் கணவரைப் பறி கொடுத்தேன்.

மற்றவள்: அடப்பாவமே! என்ன ஆச்சு? ஆபரேஷனில் இறந்து விட்டாரா?

அவள்: இல்லை. ஆஸ்பத்திரி நர்சோடு ஓடிப்போயிட்டார்.

***

About The Author

1 Comment

  1. T.V.Rahakrishnan

    இன்னுமொரு ஜோக்
    உங்க நாய் காணுமா? பேப்பரில் விளம்பரம் செய்யரு தானே
    செய்யலாம் ஆனால் எங்க நாய்க்கு படிக்கத்தெரியாதே

Comments are closed.