சற்றே நகுக!

மனைவி: (கணவனிடம்) ஏங்க, ரொம்பவும் சோகமா இருக்கீங்க?

கணவன்: என் மேனேஜர் என்னை அரை லூஸ் என்று திட்டிவிட்டார்.

மனைவி: இதுக்குப் போய் ஏன் கவலைப்படறீங்க? எனக்குத்தான் உங்களைப் பற்றி முழுசாக தெரியுமே?

***

டிக்கெட் பரிசோதகர் : (திருச்சி செல்லும் ரயிலில்) என்ன இது ஃப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு ட்ரைன்லே ஏறிட்டீங்க? இறங்குங்க!

பயணி: என்னை திருச்சி ஃப்ளாட்ஃபாரத்திலே இறக்கி விட்டுடுங்க.

***

ஒரு தந்தை (நண்பரிடம்) : என் பையன் செய்த காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை.

நண்பர் : அப்படி என்ன செய்தான்?

தந்தை: என் ‘விக்’ (wig) கை எங்கேயோ தொலைத்து விட்டான்.

***

ஆசிரியர்: "ஹோம் வொர்க்கை செய்து விட்டேன் என்கிறாய். எங்கே காணவே காணோம்?"

மாணவன்: www.Homework.com என்ற சைட்டில் பாருங்க சார்

***

ஒரு மன நல மருத்துவ மனையில்:

"ஏன், ஐம்பது பைத்தியங்களுக்கே உள்ள இடத்தில் நூறு பேரை அட்மிட் செய்திருக்கீங்க?"

எல்லோருமே அரைப் பைத்தியங்க தானே!!

About The Author